Song 1037
வாதந் தலைவலி சூலம் பெருவயி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- பெஹாக்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதானந் தனதன தானந் தனதனதானந் தனதனதனதான
Lyrics
வாதந் தலைவலி சூலம் பெருவயிறாகும் பிணியிவையணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசைவாழுங் கருவழிமருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையதுபோலும் பிறவியிலுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெறயானுன் கழலிணைபெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடுவேதங் கிளர்தரமொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவரோடுங் கெழுமுதலுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனுமேவும் பதமுடைவிறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபடவேல்கொண் டமர்செய்தபெருமாளே.
