Song 1035
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஸிந்துபைரவி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதிதானந் தனதன தானந் தனதனதானந் தனதனதனதான
Lyrics
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழியூருங் கருவழியொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமுமோரும் படியுனதருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிருபோதுங் கருணையில்மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனிநாடும் படியருள்புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடுகாலங் களுநடையுடையோனுங்
காருங் கடல்வரை நீருந் தருகயிலாயன் கழல்தொழுமிமையோரும்
வானிந் திரனெடு மாலும் பிரமனும்வாழும் படிவிடும்வடிவேலா
மாயம் பலபுரிசூரன் பொடிபடவாள்கொண் டமர்செய்தபெருமாளே.
