Song 1029
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தான தானான தானத்தனதான
Lyrics
கூறு மார வேளார வாரக்கடலாலே
கோப மீது மாறாத கானக்குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப்பகையாலே
மாது போத மாலாகி வாடத்தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித்திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற்கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப்பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப்பெருமாளே.
